தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘போல ஷங்கர்’ என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து ‘தசரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது நடுரோட்டில் தனது காரின் முன்பகுதியில் நாயுடன் நின்று கொண்டு ஸ்டைலிஷ் ஆக எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
View this post on Instagram

