Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

Keerthy Shetty to play Chiranjeevi's daughter?

சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக ஓடி, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சிரஞ்சீவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிரஞ்சீவி இயக்குநர் பாபியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படம் அப்பா, மகள் உறவை பற்றிய படம் என கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் பணியாற்றி இருந்தனர்.

இதில் சிரஞ்சீவியின் மகளாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ள ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அடுத்து பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ரவி மோகன் ஜோடியாக ‘ஜீனி’படங்களில் கீர்த்தி நடித்துள்ளார்.

Keerthy Shetty to play Chiranjeevi's daughter?
Keerthy Shetty to play Chiranjeevi’s daughter?