Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கீர்த்தி ஷெட்டி நடிக்கும் அடுத்த படத்திற்கு ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் ஹிட் அப்டேட்

keerthi-shetty-upcoming movie

“தி வாரியர்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி செட்டி. இப்படத்தில் வரும் “புல்லட்டு” என்ற பாடலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் கீர்த்தி செட்டி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அந்த வகையில் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் இயக்கப் போகும் படத்தில் பிரபல முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளார் என்ற லேட்டஸ்ட் ஆன தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள “பிரின்ஸ்” திரைப்படத்தை நடித்து முடித்து ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போகும் படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க இருக்கும் இப்படத்தை முடித்த பிறகு தான் மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கப் போகும் படத்தில் கீர்த்தி ஷெட்டியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 keerthi-shetty-upcoming movie

keerthi-shetty-upcoming movie