பயில்வான் பேச்சுக்கு கடுப்பாகி கீர்த்தி பாண்டியன் கொடுத்த பதில்

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணகி’. இந்த படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட் (E5 ENTERTAINMENT) இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ‘கண்ணகி’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கண்ணகி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனிடம் “வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டை என்றால் , இந்த வாரம் உன் படம் வருகிறது, உன் கணவன் (அசோக் செல்வன்’ படம் வருகிறது எந்த படம் வெற்றி பெரும்?” என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும் கடுப்பான கீர்த்தி பாண்டியன், “எங்க வீட்டிற்கு வந்து பார்த்தீர்களா நாங்கள் சண்டைப்போட்டதை. போட்டியும் இல்லை சண்டையும் இல்லை” என்று பதிலளித்தார்.

Keerthi Pandian latest update viral
jothika lakshu

Recent Posts

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்… நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…

6 minutes ago

‘என்னைக்கும் குறையாத மவுசு’ – 10 கோடி பார்வைகளை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…

13 minutes ago

‘TN 2026’ – நாளை OTT-யில் வெளியீடு!

2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…

31 minutes ago

‘மனிதன் தெய்வமாகலாம்’ – OTT வெளியீட்டு அப்டேட்!

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…

38 minutes ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்-3’ – இன்று மாலை வெளியாகிறது டீசர்!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…

44 minutes ago

Polladha Aasaigal Lyric Video

Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

23 hours ago