Kavin in Nayanthara movie
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் நடிப்பில் அண்மையில் ஓடிடி-யில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…