Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர். எதிர்பார்க்காத டுவிஸ்ட்

kathiriavan-exit-with-3-laks-from-bb-6 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் நடந்த கடைசி எலிமினேஷனில் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் மற்றும் கதிரவன் ஆகியோர் உள்ளனர்.

இனி கிராண்ட் பைனல் தான் என்பதால் அடுத்து பணப்பை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது அதற்கேற்றார் போல பணப்பை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்க எதிர்பாராத டுவிஸ்டாக மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கதிரவன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணத்தின் மதிப்பு அதிகமானதும் அதை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்தபட்ச தொகையுடன் கதிரவன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் சில தினங்களில் தெரிவித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

kathiriavan-exit-with-3-laks-from-bb-6 tamil
kathiriavan-exit-with-3-laks-from-bb-6 tamil