தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அர்த்திகா. இது மட்டும் இல்லாமல் மேலும் 3 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
இவர் நடித்து வரும் தீபா என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருது விழாவில் ஃபேவரைட் ஹீரோயின் என்ற விருதையும் தட்டிச் சென்றார்.
இப்படியான நிலையில் இவருக்கும் இவருடைய காதலருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்க்கையில் சிறந்த தருணங்கள் என தெரிவித்துள்ளார் அர்த்திகா. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்
https://www.instagram.com/p/CzYIs03p7A5/?igshid=MzRlODBiNWFlZA==


