Karthik Subbaraj joins Shankar's next movie
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார்.
தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம். இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றொரு இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…