ஜிகர்தண்டா 2 குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ். வைரலாகும் தகவல்

ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் தாக்கத்தை வைத்துதான் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் கதை எழுதியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த 1975-ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான இந்த ஆண்டை எனது கருப்பு ஹீரோ கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டேன். அந்த இடத்திலிருந்து தான் இந்த படத்தின் முக்கியமான கதை மற்றும் திரைக்கதை தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karthik subbaraj about jigarthanda2
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago