karthik-release-ponniyan-selvan-clims-video
மிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்தினம் அவர்கள் இயக்கியுள்ளார். வரலாற்று படமான இந்த “பொன்னியின் செல்வன்”திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பெரிய அளவில் உருவாக்கியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் “முதல் பாகம்”வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் “இரண்டாம் பாகம்”அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியிட்டு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையிலேயே நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விழாவில் பிரபல முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் அவர்களை அழைப்பதற்கான வேலையில் படக்குழு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் படத்தின் புதிய கிளம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சோழர்களின் கொடி பறக்கும் அந்த வீடியோவில் சோழன் வருகிறான் என்ற கேப்ஷனோடு வெளியாகி உள்ளது. இந்த அசத்தலான வீடியோவை நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் சாகசத்திற்கு தயாராகுங்கள் சோழன் வருகிறான் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…