Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரிலீஸுக்கு முன்னரே கார்த்தியின் சர்தார் படத்தை கைப்பற்றிய நிறுவனம்.. வைரலாகும் சூப்பர் ஹிட் அப்டேட்

Karthi in Sardar Movie Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி அவருடைய சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

கார்த்தி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கும் நிலையில் இதன் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. தெலுங்கு திரைப்படங்கள், தொடர்களை வெளியிட்டு வந்தநிலையில், தற்போது தமிழில் அவர்களுடைய கவனத்தை செலுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் பெரும் தொகைக்கு இந்த படத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் நடிக்கின்றனர். சர்தார் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யதிருக்கிறார்.

Karthi in Sardar Movie Update
Karthi in Sardar Movie Update