Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதும் விக்ரமின் துருவ நட்சத்திரம்.. நீங்க எதுக்கு வெயிட்டிங்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்திருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Karthi and Vikram movie release date update
Karthi and Vikram movie release date update