Categories: Health

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலை!

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை பச்சையாக சாப்பிடுவதற்கு முன் அதனை நன்றாக கழுவிய பிறகு சாப்பிட வேண்டும்.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

கற்பூரவள்ளியில் வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.

கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல சரும நோய்களையும் எதிர்க்கும். கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சளி, காய்ச்சல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் ற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்

admin

Recent Posts

வாட்டர் மெலன் வம்பு இழுக்கும் வினோத்.. வெளியான முதல் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

1 hour ago

பாம்பைப் பார்த்து பதறிய விஜயா, முத்து செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

2 hours ago

மாதவி சொன்ன வார்த்தை, சூர்யா காட்டும் அன்பு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

2 hours ago

O Kadhale Song

O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…

14 hours ago

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

17 hours ago

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று இசைக்கல்லூரியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…

17 hours ago