Kantara 2 Movie first look poster update
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான ‘காந்தாரா’ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இப்படத்திற்கு ‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…