Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகாநதி சீரியல் நடிக்க போகும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை,வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன்.

இந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய இவர் அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவருக்கும் விஜய் டிவி தொகுப்பாளர் அஸ்வத்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் நிச்சயதார்த்தம் மூலமாக இருவரும் காதலித்து வரும் விஷயம் வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

நிச்சயம் முடிந்த கையோடு தற்போது விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் கண்மணி மனோகரன். ஆமாம் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இவரது காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kanmani manohar in mahanathi serial
Kanmani manohar in mahanathi serial