Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பருத்தி வீரன் படத்தில் முதலில் சூரியா தான் நடிக்க இருந்தது”:கஞ்சா கருப்பு ஓபன் டாக்

கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பருத்தி வீரன்’. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘பருத்தி வீரன்’ திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

இப்படம் தொடர்பாக இயக்குனர் அமீர்- ஞானவேல் இடையே கடந்த 16 வருடங்களாக பிரச்சனை புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு, சிவகுமார் குடும்பம் அமீர் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு ஞானவேல் சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் ஏன் பொய் கணக்கு காட்டப் போகிறார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார்.

சூர்யா, கார்த்தி எனக்கு வாழ்வு கொடுக்கவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தது அமீரும், பாலாவும் தான். உன்னை பற்றி நான் பேசப்போவது இல்லை. சூர்யா தான் பருத்தி வீரனில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கார்த்தி தாடி வைத்து வந்ததால் அவர் நடித்தார். நான் ஒரு டேக்கில் நடிப்பேன். ஆனால், கார்த்தி 15 டேக்கில் நடிப்பார். 15 டேக்கிற்கு யார் காரணம் கார்த்தி தான் காரணம்.

அமீர் வீட்டு காசை சிவகுமார் குடும்பமும், சூர்யா குடும்பமும், கார்த்தி குடும்பமும் ஆட்டையை போட்டுள்ளது. இது அவர்களுக்கு தெரிய வேண்டும். ஏன் இப்படி வஞ்சகம் வைத்துள்ளீர்கள். ஞானவேல் ராஜா, அமீரின் பணத்தை கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பேசினார்.

Kanja karuppu about paruthiveeran
Kanja karuppu about paruthiveeran