தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா பகிர்ந்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், கங்குவார் திரைப்படத்தின் சவுத் இந்தியா டிஜிட்டல் உரிமையை 80 கோடிக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கோலிவுட்டில் மற்றொரு பெஞ்ச்மார்க் இதுதான் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் கங்குவா டீஸர் ஒரு பிரமாண்ட நிகழ்வுடன் ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த சுவாரசியமான தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
#KANGUVA : BenchMark⭐
• Digital Rights Sold For 80Crores To Amazon Prime (South India)
• Another BenchMark in KOLLYWOOD.
• Teaser Planned To Release On June With A Grand Event????????#Suriya | #DSP | #SiruthaiSiva— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 2, 2023