சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் டிரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில். பல திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கங்குவா திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும்
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…