Kanguva movie release date confirmed Change
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும்,ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி ,யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படமும் பத்தாம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பட ரிலீஸ் தேதியை மாற்ற போவதாக தகவல்கள் கசிந்தன.
தற்போது சூர்யா அதனை உறுதிப்படுத்தும் வகையில் மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் வேட்டையன் படத்திற்காக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் இந்த படத்திற்கு வழி விடுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கங்குவா ஒரு குழந்தை என்றும், அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றும் கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என்றும் பேசியுள்ளார். இதனால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்தது உறுதியாகி உள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…