kanguva movie latest update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோவில் நிறுவனம் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் கங்குவா திரைப்படம் குறித்து நடிகர் நட்டி நட்ராஜ் அளித்திருக்கும் சுவாரசியமான பேட்டியின் தகவல் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. அதில் அவர், நீங்கள் படத்தை பாருங்கள், கங்குவா திரைப்படம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும். படம் மிகவும் அருமையாக உருவாகி வருகிறது. திரையில் படத்தின் பிரம்மாண்டத்தை காண்பீர்கள். நானும் இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc
Othaiyadi Lyric Video , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn ,a…
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI