kanguva movie latest shooting latest update
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “கங்குவா” திரைப்படத்தில் தனது 42வது திரைப்படத்தை நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் பலவித பரிமாணங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு படத்தில் ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பாடலுக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் சமீபத்தில் நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் புதிய தகவலாக நடிகர் சூர்யாவின் காட்சிகளை அடுத்த 45 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் படப்பிடிப்புக்காக கங்குவா படகுழுவினர்கள் மீண்டும் கொடைக்கானலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதன் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…