Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவின் பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ். அறிவிப்பு வைரல்

kanguva-movie-glimpse-video-announcement

தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்போது தனது 42வது திரைப்படமாக “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வரலாற்று சார்ந்த கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா பலவிதமான கெட்டப்களில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக கொடைக்கானலில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வெகு நாட்களாக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாக இருப்பதை படக்குழு ஸ்பெஷல் போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மிகவும் உற்சாகமடைந்த ரசிகர்கள் அப்போஸ்டரை இணையதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.