kangana-ranaut-puts-an-end-to-rumors
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ பாலா, வடிவேலு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை கங்கனா ராணாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் படம் குறித்து வெளியான வதந்திக்கு பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாக இருக்கும் D 50 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கங்கனா ராணாவத்திடம் படக்குழு அணுகியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாக பரவியது. தற்போது இது குறித்து நடிகை கங்கணா தனது சமூக வலைதள பக்கத்தில் “பொய்யான செய்தி எச்சரிக்கை, எனக்கு அப்படி ஒரு படம் வரவில்லை, தனுஷ் என்னுடைய ஃபேவரிட் அவரிடம் நான் நோ சொல்ல மாட்டேன்” என குறிப்பிட்டு வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…