Kamal's 'Vikram' shooting delayed by Suriya
நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பும் காரைக்குடியில் நடைபெற உள்ளது. குறிப்பாக சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளையே விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வைத்திருக்கிறாராம்.
கொரோனா சூழல் என்பதால் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தர முடியாது என அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இதனால் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே விக்ரம் படப்பிடிப்பு நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்னும் பத்து நாட்கள் நடைபெற இருப்பதால், கமலின் விக்ரம் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions