Sasikumar to pair up with Haripriya
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா, உடன்பிறப்பு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள சசிகுமார், அடுத்ததாக கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சத்யசிவா இயக்கும் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…