நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும், ‘இந்தியன் -2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.
இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.
