kamal-hassan-latest-photo-viral
இந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைகளை தாண்டி நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தினை லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் புகைப்படம் ஒன்று படும் வேகமாக வைரலாகி வருகிறது. அதனை “நாயகன் மீண்டும் வரான்” என்ற தலைப்புடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…