kamal-hassan-join-in-poniyan-selvan
தென்னிந்திய சினிமாவை எதிர்பார்க்கும் அளவிற்கு மாபெரும் பொருட்செலவில் தயாராகி இருக்கும் கல்கி புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தான் “பொன்னியின் செல்வன்- 1”. பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து, முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை தினம் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வந்தது.
விக்ரமின் ஆதித்ய கரிகாலன் போஸ்டர், கார்த்தியின் வந்தியத் தேவன் போஸ்டர், ஐஸ்வர்யா ராயின் நந்தினி போஸ்டர், த்ரிஷாவின் குந்தவை போஸ்டர், ஜெயம் ரவியின் அருள்மொழி வர்மன் போஸ்டர் போன்றவற்றை நேற்று வரை படக்குழு வெளியிட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன்” படத்தின் ‘டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா’ மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் இப்படத்தின் டீசரை ஐந்து மொழிகளிலும் படக்குழு வெளியிடுவதற்காக தமிழில் சூர்யா, இந்தியில் அமிதாப் பச்சன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு போன்ற முன்னணி பிரபலங்கள் இந்த டீசரை வெளியிட்டனர். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட 14 மணிநேரத்தில் யூட்யூப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார் என்ற வேற லெவல் ஆன தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில்’ நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் யாருக்கு கமல் குரல் கொடுத்துள்ளார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாசான வேற லெவல் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…