சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலரது மனதை கவர்ந்தவர் சினேகன் இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சினேகன் அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் அப்போது கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து “காதல் கவிதை” என பெயர் சூட்டியுள்ளார்.
இதனை கன்னிகா தனது instagram பக்கத்தில் பகிர்ந்து அதில், எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையங்களோடு “காதல் கன்னிகா சினேகன்” என்ற பெயரையும் “கவிதை கன்னிகா சினேகன்” என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பெயர் வித்தியாசமாகவும், சூப்பராகவும் இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram