Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகேஷ்பாபுவின் தந்தை மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து கமல்ஹாசன் போட்ட பதிவு

kamal haasan consoles mahesh babu lost his father Krishnagaru

இந்திய திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு திரை உலகில் மூத்த முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருந்த கிருஷ்ணாவின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை மற்றும் பிரபல நடிகருமான கிருஷ்ணா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன், தெலுங்கு சினிமாவின் முன்னணி சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். தந்தையை இழந்த மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறிய கமல் அண்ணா, அம்மா, அப்பாவை ஒரே வருடத்தில் இழந்து வாடும் தம்பி மகேஷின் துயரத்தில் தானும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த ஆறுதலான பதிவு வைரலாகி வருகிறது.