Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த கமல். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

kamal-haasan-congratulates-vijay

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எத்தனை நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் இவரது படம் அதையெல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு வசூலை குவிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் விஜய் மீது அன்பு வைத்துள்ளனர்.இவர் நடிகராக இருந்தாலும் தன் மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். புயலில் பாதித்தவர்களுக்கு நிவாரணம், மாணவர்களுக்கு பாடசாலை என பல உதவிகளை செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தன் படங்களிலும் அரசியல் பற்றி பேச இவர் தவறியதில்லை. இதன் மூலம் விஜய்க்கு அரசியல் மீது இருந்த ஆர்வம் வெளிப்படையாக தெரிந்தது. மேலும், இளைஞர்களும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பலர் இவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்று காத்திருந்தனர்.

இப்படி எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் நடிகர் விஜய் நேற்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன், கட்சி தொடங்கிய முடிவுக்கு பாராட்டுகளும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

kamal-haasan-congratulates-vijay
kamal-haasan-congratulates-vijay