இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் உயிரிழந்த பிரபலம் முன்னணி நடிகர் மனோபாலாவின் மறைவிற்கு வருத்தத்துடன் பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023