கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘தசாவதாரம்’ திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘படம் இயக்குவதில் ‘தசாவதாரம்’ பிஹெச்டி போன்றது என்றால், ‘மைக்கேல் மதன காமராஜன்’ டிகிரி கோர்ஸ் போன்றது. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டிருந்தார்.
அதற்கு, இன்று பதிலளித்துள்ள கமல், ‘நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.