தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மகனுக்கு 1 வயது ஆகிவிட்டது என்று கூறி அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram

