அக்டோபர் 30ல் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி கௌதம் கிச்சலு என்பவருடன் தனக்கு மும்பையில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…