தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்து வந்த இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு ரெஸ்டில் இருந்த காஜல் திடீரென கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் குழந்தையை பெற்றெடுத்து விட்டார். இந்த நிலையில் இனி காஜல் அகர்வால் மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்தச் சூழலில் தெலுங்கு பத்திரிக்கை ஒன்றில் காஜல் அகர்வாலுக்கு தற்போது நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் ஒரு வருடத்திற்கு அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

kajal agarwal re entry update

