Kadaisi Vivasayi best in world cinema
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’.
;கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.. இருப்பினும் ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கௌரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம், தற்போது தனது கிரீடத்தில் மற்றுமொரு வைர மகுடத்தைப் பெற்றுள்ளது. .
உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் Letterboxd எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் உரத்து முழங்கியிருக்கிறது.
இதனால் உற்சாகமடைந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த தகவலை புகைப்பட ஆதாரத்துடன் இணையங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
.இந்த தளத்தில் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ‘’ஆர். ஆர். ஆர்’’ திரைப்படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த உலக நாயகன் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் பதினோராம் இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், இதில் ‘விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…