trisha-character-in-ponniyin-selvan movie
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் மாபெரும் படைப்பான கல்கி புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பலமொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சூழல் என்ற வாசகத்துடன் ஏ. ஆர்.ரகுமான் இசையில் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது திரிஷா “குந்தவை” கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே தற்போது நிலவி வருகிறது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…