Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான் ரெடி தான் பாடலை முந்திய காவலா.. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

kaavaalaa-song-views-details

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் காவாலா என்னும் பாடலில் தமன்னா கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி அனைவரையும் ரீல்ஸ் செய்ய வைத்து இணையதளத்தை பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் தற்போது 78.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 78.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற லியோ படத்தின் “நான் ரெடி தான்” பாடலின் சாதனையை முந்தியுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டு பாடலையும் அனிருத் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

kaavaalaa-song-views-details
kaavaalaa-song-views-details