Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யூடியூபில் புதிய சாதனை படைத்த காவாலா பாடல்.!! லேட்டஸ்ட் அப்டேட் வைரல்

kaavaalaa song latest views viral update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏராளமான பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதனால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் இணையதளத்தில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலாக வெளியான காவாலா பாடல் தொடர்ந்து ரசிகர்களை வைப் செய்து தற்போது வரை யூடியூபில் 82 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.