தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி இரண்டு பெண்களை காதலிப்பது தான் இந்த படத்தின் ஜாலியான கதை களம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது காத்துவாக்குல 2 காதல் சின்னத் திரை விமர்சனம் என பாக்கியலட்சுமி சீரியலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
நடுவில் கோபி ஒரு பக்கம் பாக்கியா மறுபக்கம் ராதிகா என போஸ்டர் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.
