Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வரவேற்பை பெற்ற அநீதி.. நன்றி தெரிவித்து காளி வெங்கட் போட்ட வீடியோ

kaali-venkat-post-latest video

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா, பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் என் நன்றி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் திருப்பி என்ன கொடுப்பது என்று தெரியவில்லை” என்று பேசினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kaali Venkat (@kaaliactor)