ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு.
நெல்லை டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் என்பதால் கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சீல் வைத்தனர்.