தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என ஜாய் கிரசில்டா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் கலை வல்லுனராக கலக்கி வருகிறார். பல விஐபி நிகழ்ச்சிகளில் இவரது சமையல்தான் இருந்து வருகிறது.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய்
கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே வழக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராய் சாய் கிரிஸெல்டாவின் மீது சோசியல் மீடியாவில் போட்டிருக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்ததை நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து பேசிய ஜாய் இதை நான் என்னுடைய மகன் ராகா ரங்கராஜுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் தப்பு செஞ்சவங்க தண்டனையை அனுபவித்து தான் ஆகா வேண்டும் என்று கூறியுள்ளார்.
தப்பு பண்ணி இருக்கிறதுனால தான் இதுவரைக்கும் அமைதியா இருக்காரு டிஎன்ஏ கேட்டது அவர்தானா இதுவரைக்கும் அதைப் பத்தி எந்த கிளாரிஃபிகேஷனும் கொடுக்கல அதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க அவர் எப்படி பட்டவர் என்பதை இதில் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


