நியூயார்க் நகரில் வசிக்கும் நாயகி ராஹி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். இதற்கு பழிதீர்க்கும் வகையில், போதை பொருள் கடத்தல் கும்பல் காரர்கள் ராஹியை கடத்த முயற்சிக்கின்றனர்.இதனால் சென்னை வரும் ராஹிக்கு நாயகன் வருண் பாதுகாப்பாளராக இருக்கிறார்.
இடையில் ராஹியை கொல்ல வரும் போதை பொருள் கும்பலிடம் இருந்து காப்பாற்றுகிறார் வருண்.ஒரு கட்டத்தில் போதை பொருள் கடத்தல் தலைவன் யார் என்ற விவரம் ராஹி மற்றும் வருணுக்கு தெரியவருகிறது.
இறுதியில் ராஹியை வருண் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வருண் கதைக்கு ஏற்ற வகையில் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகி ராஹி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். விசித்திரா, லிஸி அந்தோனி, மன்சூர் அலிகான், திவ்யதர்ஷினி, கிருஷ்ணா ஆகியோரும் தங்கள் பணியை
சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி கதையை விளக்கும் காட்சிகளுடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் பெண்ணை எப்படி காப்பாற்றுவது என்ற விஷயத்தை மையப்படுத்தி செல்கிறது.இதில் ஆக்ஷன் மற்றும் விறுவிறு காட்சிகள் திரைக்கதையில் வேகத்தை உணர செய்கிறது. வழக்கமான கௌதம் மேனன் படங்களை போன்றே ஜோஷூவாவிலும்அதிகளவு ஆங்கிலம் பேசும் கதாபாத்திரங்கள், அழகமான காட்சிகள், பைக் ரைடு, காதல், அழகான நாயகி உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன.
கார்த்திக் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியுள்ளது.
ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி ரோமான்சிலும் எஸ்.ஆர்.கதிர் லென்ஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…