Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே பாட்டிற்கு அஜித் விஜய் என இரண்டு பேரையும் மாசாக கோரியோகிராபி செய்ய வேண்டும்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் ஓபன் டாக்

johnny-master-about-ajith-thalapathy vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வெங்கட்பிரபு அதற்கான கதையை உருவாக்கி உள்ளதாக அவருடைய தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் தமிழில் பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு நடன மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது விஜய் உடன் பணியாற்றிய ஆச்சு அஜித்துடன் எப்போது என கேட்க அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் அஜித் விஜய் என இருவரையும் ஒரே பாட்டில் வைத்து மாசாக கோரியோகிராபி செய்ய வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் முழுவதும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என தொகுப்பாளினி பிரியங்காவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஜானி மாஸ்டர் சொல்வது போல ஒரே பாடலில் அஜித், விஜய் என இருவரும் இணைந்தால் அது எப்படி இருக்கும் என்பதை எங்களோடு காமெண்டில் சொல்லுங்க.

johnny-master-about-ajith-thalapathy vijay
johnny-master-about-ajith-thalapathy vijay