தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2014 இல் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இதில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு மிரட்டலான ஷாட் வீடியோவுடன் அறிவித்துள்ளது. அதன்படி ஜிகர்தண்டா 2 திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
" Jigarthanda DoubleX "
Here's A SHOT Update https://t.co/h0BNGowRIP#DoubleXDiwali#JigarthandaDoubleX
@offl_Lawrence @iam_SJSuryah @DOP_Tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers @kathiresan_offl @dhilipaction@kunal_rajan pic.twitter.com/YJaZDfQycx
— karthik subbaraj (@karthiksubbaraj) May 15, 2023