Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டி சங்கர் போட்ட பதிவு

ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஜிகர்தண்டா 2 படம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான பதிவில், “ஜிகர்தண்டா 2 – திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு. கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி – கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் அதரடியான பின்னணி இசை. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.