jesusdas-appeared-before-fans-online-and-cut-the-cake
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்மின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள் ஆகும்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கேரளாவில் இருக்க ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் நினைத்தபடி தனது பிறந்தநாளில் கேரளாவில் இருக்க முடியாமல் போனது.இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசுதாசுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.”,
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…