Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பாம்பாட்டம்” படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் வைரல்

jeevan-in-pambattam-release-date update

தமிழ் சினிமாவில் நான் அவன் இல்லை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜீவன்.

கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் இருந்து வந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பாம்பாட்டம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரபல இயக்குனர் வி.சி வடிவுடையான் இயக்கத்தில் வைத்தியநாதன் பிலிம்ஸ் கார்டன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு இனியன் ஜே ஹரிஸ் ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் URS எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஜீவனுடன் இணைந்து மல்லிகா ஷெராவத், சுமன், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நிலையில் படம் பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

jeevan-in-pambattam-release-date update
jeevan-in-pambattam-release-date update